Breaking News

அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல்களுக்கு பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் நியமனம்

புதுடெல்லி, செப். 8-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கும்  பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் முன்னாள் முதல்வரை பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.



உத்தரபிரதேசம் மாநில தேர்தல் பொறுப்பாளர்கள்

உ.பி., மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர், அர்ஜூன் ராம் மேவால், அன்னபூர்னா தேவி, சோபனா கரன்தல்ஜே ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.   ஹரியானா முன்னாள் அமைச்சர் கேப்டன் அபிமன்யு மற்றும் ராஜ்யசபா எம்.பி., சரோஜ் பாண்டே ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

உ.பி.,யில் பிராந்திய ரீதியாகவும் பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேற்கு உ.பி., கண்காணிப்பாளராக சஞ்சீவ் பாட்டியாவும், கான்பூரில் தேசிய துணை பொருளாளர் சுதீர் குப்தாவும், கோரக்பூரில் அர்விந்த மேனனும் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராகள்

கோவா மாநில பொறுப்பாளராக, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராகள்

மணிப்பூர் மாநில பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இணை பொறுப்பாளர்களாக அசோக் சிங்கால், பிரதீபா பவுமிக் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராகள்

உத்தர்காண்ட் மாநில பொறுப்பாளர்களாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ஆர்பி சிங், லோகேட் சாட்டர்ஜியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராகள்

பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கஜேந்திர சௌகான் பாரதிய ஜனதா கட்சி இன்று நியமனம் செய்தது.
 
இணைப் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி,  மீனாட்சி லேகி ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வினோத் சாவுடாவும் செயல்படுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் உடன் 2022ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

மத்திய அரசு இயற்றிய மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் பாரதிய ஜனதா கட்சி கடுமையான பின்னடைவு காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

No comments

Thank you for your comments