Breaking News

அன்புமணி மகள் திருமண வரவேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு

சென்னை

பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரின் பேத்தியும், அன்புமணி - சௌமியா தம்பதியரின் மகளுமான சங்கமித்ராவின் திருமண வரவேற்புக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து அன்புமணி மற்றும் செளமியா ஆகியோர் அழைப்பிதழை அளித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி - சௌமியா ஆகியோரின் மகளுமான சங்கமித்ராவுக்கும் கடந்த வாரம் சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜிக்கு திருமணம் நடைபெற்றது.

தனது பேத்தியின் திருமணத்தை மருத்துவர் ராமதாஸ் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் வழங்கினார்.   அப்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments