இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் அவர்கள் மங்காப்பிள்ளை மாநில துணைப் பொதுச் செயலாளராக அறிவித்துள்ளதையடுத்து விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மாநில துணைப் பொதுச் செயலாளர் மங்காப்பிள்ளை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஆணவப்படுகொளைக்கு எதிரான சட்டங்களை தமிழக அரசு உடனடியாக இயற்றவேண்டும் என்றும் கண்ணகி முருகேசன் தீர்ப்பு வழங்கிய உத்தமராசாவுக்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கதிர்வேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநில துணை பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளைக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூகம் ஆய்வாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments