பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த தனியார் காலணி பேருந்து விபத்து
ஆம்பூர், செப்.27-
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை சாய சக்தி திரையரங்கம் அருகில் திம்மபேட்டையில் இருந்து ஆம்பூர் தனியார் காலணி தொழிற்சாலைக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திம்மாம்பேட்டையிலிருந்து ஆம்பூர் தனியார் காலணி தொழிற் சாலைக்கு பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்து வேன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் அய்யாவு மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய அய்யாவு பலத்த காயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அய்யாவு உயிரிழந்தார்.
வேனில் பயணித்த 15-க்கும் மேற்பட்ட தனியார் காலணி தொழிற்சாலை பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments