தேசிய பணமாக்கல் திட்டம் பொதுத்துறை நிறுவனங்கள் அழிப்பு... கண்டன ஆர்ப்பாட்டம்...
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் தேசிய பணமாக்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நெடுஞ்சாலை, மின்சாரம், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், நிலக்கரி, கணிமவளம், அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மோடி ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் மக்கள் அதிகாரம் வட்டார செயலாளர் அசோக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் ராமர், தமிழக விவசாயிகள் கட்சி நிறுவனர் தயார்பேரின்பன், கடலூர் மக்கள் அதிகாரம் ராமலிங்கம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், ஐயப்பன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ராஜேந்திரன், தமிழ் தேசிய பேரியக்கம் மணிமாறன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாரம், CPML மக்கள் விடுதலை, தமிழ் தேசிய பேரியக்கம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி, தமிழ் தேசிய முன்னணி விடுதலை உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

No comments
Thank you for your comments