உத்திரமேரூரில் திமுக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்... தொற்று பரவும் சூழல்
காஞ்சிபுரம், செப்.14-
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதியினை தமிழக தேர்தல் ஆனையம் 13-09-2021 அன்று திங்கட்கிழமை அறிவித்தது. இதனையடுத்து அந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தனியார் திருமண மண்டபத்தில் உத்திரமேரூர் ஒருங்கிணைந்த ஒன்றியங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 73 பஞ்சாயத்துகள், 22 கவுன்சில்களுக்கும், 2 மாவட்ட கவுன்சிலர்களுக்கும் விருப்பமனு பெறப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை வழங்கினர்.
இதனால் உத்திரமேரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் திமுகவினர் கூடினர். பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. இதனால் தொற்றுநோய் பரவும் சூழல் நிலவியது..

No comments
Thank you for your comments