வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் கைது
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சூர்யாதேவி காம்ப்ளக்ஸில் தங்கிக்கொண்டு எரையூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொத்தனாராக வேலை செய்யும் தேவேந்திரன் (45) த/பெ.நாகப்பன், திருவதிகை கிராமம், கடலூர் மாவட்டம் மற்றும் அவரது நண்பர் காமராஜ் (44) த/பெ.புஷ்பலிங்கம், ஆகிய இருவரும் 08.09.2021 அன்று 21.00 மணியளவில் கூலிப்பணம் ரூ.14,600 வாங்கிக்கொண்டு அவர்கள் தங்கியிருக்கும் சூர்யாதேவி காம்ப்ளக்ஸ் அருகே வந்தனர்.
அச்சமயம், அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் வழிமடக்கி கத்தியால் இருவரையும் தாக்கி தேவேந்திரனிடமிருந்து ரூ.14,600- பணத்தையும், காமராஜிடமிருந்து நோக்கியா கைப்பேசியையும் பறித்துச்சென்றனர்.
இதுகுறித்து, ஒரகடம் காவல்நிலையத்தில் 09.09.2021 அன்று தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், அப்பூரைச் சேர்ந்த
1) கணபதி ( 20 ) த/பெ.கோட்டி, துலுக்காணத்தம்மன் கோயில் தெரு,
2) கண்ணன் ( 20 ) த/பெ.முனுசாமி, மலைகோயில் தெரு மற்றும்
3) மணி (எ) பாட்டில் மணி ( 19 ) த/பெ.நாகப்பன், மலைகோயில் தெரு
ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள், செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை விரைந்து பிடித்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.



No comments
Thank you for your comments