Breaking News

குப்பை மற்றும் கழிவுகளால் பாழடைந்த நிலையில் சுண்ணாம்பு குட்டை... தொற்று பரவும் அபாயம்...

விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே சுண்ணாம்பு குட்டை முள்புதர்கள் மண்டி, குப்பைகள் மற்றும் கழிவுகளால் பயன்படுத்த முடியாமல் துற்நாற்றம் வீசுகின்றன... தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது... இதனை அகற்றி.. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கவேண்டும் என்று பொதுமக்களிடை  கோரிக்கை வலுக்கின்றனது... நடவடிக்கை எடுக்க நிர்வாகம்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் சுமார் 5000- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு வகையில் பயன்படக்கூடிய  சுண்ணாம்பு குட்டை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

அதில் பிளாஸ்டிக் பை, மதுபாட்டில்கள் மற்றும் தேவையற்ற கழிவுப் பொருட்கள் கலந்துள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசுகின்றது..

அதுமட்டுமின்றி, பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குட்டையை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments