பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழா - பாரதியார் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
சென்னை
செப்டம்பர் 11ம் தேதி மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பாரதியார் உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு "மகாகவி நாள்''- ஐ முன்னிட்டு, இன்று (11.9.2021) சென்னை , காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.எம்.எச். ஹசன் மௌலானா, த.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,
பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ எனத் தன் கவிதைகளாலும் எழுத்துகளாலும் விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பிய பாட்டுக்கொரு புலவன், மகாகவி பாரதியாரின் நினைவுநாளில் அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/XrZkdYE8xk
— M.K.Stalin (@mkstalin) September 11, 2021
பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்; அண்ணா, கலைஞர் நூலகங்களில் ‘பாரதியியல்’ தனிப்பிரிவு; பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்விருக்கை என 14 அறிவிப்புகளை வெளியிட்டேன்!
— M.K.Stalin (@mkstalin) September 10, 2021
மதங்கள் அண்டா நெருப்பவன் - புகழ் போற்றுவோம்! pic.twitter.com/AhqsG6I95t
No comments
Thank you for your comments