பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
விருத்தாசம்:
பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இரும்பு மங்கை அம்மையார் மாயாவதி மற்றும் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்டங் அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா, சிதம்பரம் சாலை, ஜங்ஷன் சாலை, உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இந்நிகழ்ச்சியில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவராக அய்யாசாமி, மாவட்ட துணைத் தலைவராக சிவப்பிரகாசம், மாவட்ட பொதுச்செயலாளராக அன்ன பிரகாஷ், மாவட்ட பொருளாளராக பாக்கியராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அகிலாண்டேஸ்வரன், விருத்தாசலம் தொகுதி தலைவராக சாத்துக்கூடல் லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன் மற்றும் பிச்சைமுத்து பாஸ்கரன் ராஜேந்திரன், மருதையன், மதிவாணன், அஜித், குமார் அசோகன், வல்லரசு, தேவா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்...
No comments
Thank you for your comments