காட்பாடியில் மணல் கடத்தல்... டிப்பர்லாரி உள்பட ஒருவர் கைது..
காட்பாடி:
விருதம்பட்டு பாலாற்றின் அருகிள் உள்ள சினிமா திரையரங்கம் எதிரில் விருதம்பட்டு உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி நிறுத்தி சோதனையிட்டனர் சோதனையில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே விருதம்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கீழ் மொனூர் பகுதியே சேந்த ஆறுமுகம் மகன் மனோகரன் வயது 39 என்பது தெரிய வந்தது உடனே அவரை கைது செய்து லாரி பறிமுதல் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
No comments
Thank you for your comments