Breaking News

பசுமை இயக்கம் சார்பில் 500 மேற்பட்ட பனை விதைகள் நடவு

கடலூர்:

வேப்பூர் அருகே கடலூர் பசுமை இயக்கம் சார்பில் 500 மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.


கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலங்கியநூர் கிராமப் பகுதியில் நிலத்தடி நீரினை தக்க வைப்பதற்காகவும் ஏரி மற்றும் குலங்களின் அருகே உள்ள கரைகளை மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் கடலூர் பசுமை இயக்கம் சார்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை கிராம சமூக ஆர்வலர்கள் உடன் சேர்ந்து நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களைக் கொண்டு நடவு செய்யப்பட்டது


இந்நிகழ்வில் கடலூர் பசுமை இயக்கத்தின் தோழர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments