Breaking News

விசிக சார்பில் உறவுகள் ஒன்று கூடல் நிகழ்வு

கடலூர்:

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உறவுகள் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் செம்மல் தலைமை தாங்கினார்.

நல்லூர் ஒன்றிய துணை செயலாளர் கல்யாணசுந்தரம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் துரை. மோகன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலதண்டாயுதபாணி, ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நகர துணை செயலாளர் சிங்கமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து இக்கூட்டத்தில் ஆகத்து 17 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சித்தமிழர் முனைவர் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடியதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது,

தொடர்ந்து பெண்ணாடம் ரயில் நிலையத்தில் வைகை விரைவு வண்டி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெண்ணாடம் பேரூராட்சியில் உள்ள தொல்காப்பியர் அரங்கம் பல மாதங்களாக மூடி கிடைக்கின்றது அதனை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை சிவகுமார், தொளார் தங்கமணி,  சிறுத்தை எழுச்சி பாசறையின் நகர அமைப்பாளர் ஐயப்பன், பிரகாஷ், ராஜா, சின்னா, விஜி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகரச் செயலாளர் மகேந்திரன் மகன் சோழன் நகர் பிரபாகரன் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments