Breaking News

75-வது சுதந்திர தினவிழாவை போற்றி சைக்கிள் பேரணி... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழியனுப்பி வைத்தார்

தர்மபுரி:

75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதாமாகவும் கலாச்சாரத்தை போற்றும் விதமாகவும் கன்னியாகுமரியில் இருந்து ராஜ்காட்வரை  சைக்கிள் பேரணியை மேற்கொள்ளும் சிஆர்பிஎஃப் வீரர்களை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழியனுப்பி வைத்தார்.

75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதாமாகவும் கலாச்சாரத்தை போற்றும் விதமாகவும் மக்களிடையே விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  கன்னியாகுமரியில் இருந்து ராஜ்காட்வரை 2800கிலோமீட்டர் தூரத்தை ஒருநாளைக்கு 70கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்  சைக்கிள் பேரணியை மேற்கொள்ளும் சிஆர்பிஎஃப் வீரர்களை தர்மபுரி மாவட்ட மக்களைவை உறுப்பினர் செந்தில்குமார்  வரவேற்று கவுரவித்தார். 

அதன் தொடர்சியாக  நேற்று காலை மேலும் 20 சைக்கிள் வீரர்கள் கிருஷ்ணகிரி வழியாக தங்கள் பயணத்தை துவக்கினர். அவர்களை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேரில் சென்று வழியனுப்பி வைத்தார்.

இந்த வழியனுப்பும் நிகழ்ச்சியில் முன்னால் சிஆர்ஓிஎஃப் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று வழியனுப்பி வைத்தனர் .

No comments

Thank you for your comments