அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து
உத்திரமேரூர் :
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனைப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது.
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது வாரம் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பலர் தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்கள் அதிஷ்டவசமாக தப்பினர்.
கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் என்பதால், சில தினங்களாக பெய்த மழையால் பள்ளியின் மேற்கூரை இடிந்து விபத்துக்குளாகியுள்ளது.
பள்ளி நடைப்பெற்று இருந்தால் மாணவர்களின் நிலை என்னவாகி இருக்கும் என்று அச்சத்தில் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்...
பள்ளி திறக்கும் முன் பள்ளி கட்டிடத்தை சீரமைத்து புதுபிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பள்ளி புதுபிக்கவில்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளதாக தங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments