Breaking News

கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா

காஞ்சிபுரம், செப்.16:

காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்தவர்களை பாராட்டி கவிரவிக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் சி.வி.ராஜோபால் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வளையாபதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகேஷ் வரவேற்றார். நெசவாளர் அணி ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். மதிமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.


கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை மனிதநேயத்தோடு நல்லடக்கம் செய்த தமுமுக நிர்வாகிகள் சலீம்கான், தாஜிதீன், பசுமைப் புரட்சி எங்கள் முயற்சி மகேந்திரன் ஆகியோரை பாராட்டி கவுரவித்தனர். 


நிகழ்ச்சியில் மதிமுக, தமுமுக மற்றும் பசுமைப் புரட்சி எங்கள் முயற்சி அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments