அரசு தலைமை செயலகத்தை மாற்றினால்... எச்சரிக்கை விடுக்கும் மாஜி அமைச்சர்
சென்னை:
பல்நோக்கு மருத்துவமனையைத் தமிழக அரசின் தலைமைச் செயலகமாக மாற்றினால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்த அதிமுக தயங்காது எனவும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தலாமா என்றும் மாஜி அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரோடு தொடர்புள்ள 20 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. பல கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், கே.சி.வீரமணி மீதான ரெய்டு, அரசியல் உள்நோக்கம் கொண்டது. பழிவாங்கும் உணர்வோடு நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது ரெய்டு நடத்தலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் மாஜி அமைச்சர் ஜெயகுமார்.
ராமசாமி படையாட்சியாரின் 104-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயகுமார், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்,
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை என்றும் உள்ளாட்சி தேர்தலில் இயங்கவிடமால் கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர். அது நிறைவேறாது என்றார்.
ஓமந்தூரார் மருத்துவமனை கல்வெட்டு புதுப்பிக்கப்பட்டது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர்
பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியதால் கொரானோ காலத்தில் பல உயிர்கள் காக்கப்பட்டுள்ளது, உயிர்காக்கும் இடமாக உள்ள மருத்துவமனையை மாற்றினால், அவர்கள் தந்தை புகழுக்காக மாற்றினால், பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்றார்.
புதிய தலைமைச் செயலகம் - கல்வெட்டு
ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில், கருணாநிதி, மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற திறப்புவிழா கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் அரசு பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியை ஜெயலலிதா திறந்த வைத்த கல்வெட்டு அகற்றப்பட்டு அதன் அருகிலேயே மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு குழுவினர் வருகை தந்து இந்த கல்வெட்டை அங்கு வைத்து விட்டு சென்றனர். புதிய தலைமைச் செயலகம் என்ற பெயர்தான் அந்த கல்வெட்டில் இருப்பதால் ஒருவேளை மருத்துவமனை கட்டிடம் மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கழகத்தின் சார்பில், S.S.இராமசாமி படையாட்சியார் அவர்களின் 103-வது பிறந்தநாளையொட்டி சென்னை-கிண்டியில் உள்ள அவரது சிலை அமைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர்களும் கழக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.#AIADMK pic.twitter.com/2HTnDgcd4T
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 16, 2021


No comments
Thank you for your comments