6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் தொடங்க பரிந்துரை-- முதலமைச்சரிடம் ஆய்வு அறிக்கை
சென்னை, செப்.16
அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சரிடம் அறிக்கை தந்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று நேரில் சந்தித்து, தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை வழங்கினார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் கடந்த 14ந் தேதி நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாம் என்று சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
அவர்கள், அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

No comments
Thank you for your comments