முதியவர்களை தாக்கி நகை பறித்து சென்ற வழக்கில் பெண் உள்பட இருவர் கைது...
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் டாஸ்மார்க் அருகில் கணவன் மனைவியை தாக்கி நகை பறித்து சென்ற வழக்கில் இருவரை கைது செய்த வேப்பூர் போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
வேப்பூர் அருகிலுள்ள காட்டுமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை (வயது 74). இவர் தனது இளைய மகனுக்காக வேப்பூர் கூட்டுரோடு டாஸ்மாக் எதிரே வீடு கட்டி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி இரவு முனியப்பிள்ளையும் அவரது மனைவி மலர் என்பவரும் வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த, முகமூடி அணிந்த இரண்டு மர்மநபர்கள், அவரையும், அவரது மனைவி மலரையும் தாக்கி, 10 சவரன் தாலிச் செயினை பறித்து சென்றனர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் வேப்பூர் பகுதியில் சுற்றுவதாக போலீசாருக்கு லொக்கேசன் காட்டியுள்ளது.
அதனை தொடர்ந்து வேப்பூர் புறக்குட்டை போலீசார் வேப்பூர் பகுதியில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மனைவி பிரேமலதா (வயது -29) அவர்களது உறவினர் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது -29) ஆகிய இருவரையும் வேப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அதில் இவர்கள் மீது அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது மேலும், மணிகண்டன் தனது மனைவியுடன் வேப்பூரில் தங்கி, தேசிய வங்கி அருகிலுள்ள சர்வீஸ் சாலையில் டிஜிட்டல் கடையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக சுமார் ஆறு மாதம் பணிபுரிந்துள்ளார் .
கடந்த ஜூன் மாதம் பிரேமலதாவின் தம்பி திருமணத்திற்காக பிரேமலதா, அவரது கணவர் ரமேஷ் (வயது 35) ஆகியோர் வேப்பூர் வந்துள்ளனர் .
அப்போது, ரமேஷ், இவரது மனைவி பிரேமலதா, பேட்டை மணி என்கிற மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முனியப்பிள்ளை வீட்டில் திருடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்
அதன்படி கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி இரவு மணிகண்டன், ரமேஷ் இருவரும் முனியப்பிள்ளை வீட்டிற்குள் புகுந்து திருடினர். பின்னர் கணவன் மனைவியான பிரேமலதா, ரமேஷ் ஆகியோர் தஞ்சாவூருக்கு தப்பிச் சென்றனர். தஞசாவூரில் நகைகளை உருக்கிக்கொண்டு, விருத்தாசலத்தில் விற்பனை செய்ய வந்தபோது பிரேமலதாவும், மணிகண்டனும் போலிசாரிடம் சிக்கி கொண்டனர் ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்.
அவர்களிடமிருந்து நேற்று 6.5 சவரன் நகைகளை வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, எஸ்ஐ, சந்திரா மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், ரமேஷ் மனைவி பிரேமலதா இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.


No comments
Thank you for your comments