Breaking News

முதியவரை தாக்கியதால் விஷம் அருந்தி மரணம்... திமுக நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 4 பேர் மீது வழக்கு..

கடலூர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பம் பகுதியில்,  திமுகவைச் சேர்ந்த கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி. ரமேஷ்  அவருக்கு சொந்தமான  TRV முந்திரிபயிற்  கம்பெனி   செயல்பட்டு வருகின்றது.


இந்த முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு ஊரைச் சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராஜ் (வயது 60). இவர் இந்த முந்திரி கம்பெனியில் சுமார் ஏழு வருடத்துக்கு மேலாக பணியாற்றி வருகிறார்,

இந்தநிலையில் கோவிந்தராஜ் முந்திரி கம்பெனியில் முந்திரிப் பயிர் திருடியதாக கூறி  ஊழியர்களால் தாக்கப்பட்டு காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 19.09.21 அன்று ஒப்படைத்தனர்.

ஆனால் போலீசார் கோவிந்தராஜ்க்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு நாளை காலை புகார் அளியுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால் இவர்கள் மீண்டும்  கம்பெனிக்கு கோவிந்தராஜ் அழைத்துக்கொண்டு அடைத்து வைத்திருந்த நிலையில் கோவிந்தராஜ் விஷம் குடித்து மயங்கி விட்டதாக பண்ருட்டி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால்  பரிசோதித்த மருத்துவர்கள் கோவிந்தராஜ்  இறந்துவிட்டதாக தெரிவித்தனர்

தகவலறிந்து கோவிந்தராஜ் உறவினர்கள் பாமக நிர்வாகிகள் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் புகாரை பெற்றுக்கொண்ட காடாம்புலியூர் போலீசார் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் வி ரமேஷ் மீது கைது நடவடிக்கை எடுக்கக் கோரி பண்ருட்டி கும்பகோணம் சாலையில் மறியல் செய்தனர். 

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







No comments

Thank you for your comments