Breaking News

தேமுதிக கட்சியின் சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..!

தருமபுரி:

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்த நாள் விழாவையொட்டி 15-09-2021 அன்று தர்மபுரியில்  4 ரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு தேமுதிக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

தர்மபுரி மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தங்கவேல், விஜயகாந்த் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன்,ஒன்றியச் செயலாளர்கள் விக்னேஷ் குமார், சரவணன், ஜம்பேரி, விஜயகாந்த், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் தேவதேவன், பூபதி, சிவபிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments