Breaking News

பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தெற்றுக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க அறிவுறுத்தல்

சென்னை:

தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தெற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளை தொடந்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவினை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் 15.09.2021 காலை 06.00 மணி வரை நீட்டித்துள்ளது.

தமிழ்நாட்டில் வருகின்ற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு 30.08.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வரசாணையின்படி கீழ்கண்ட நடைமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

1. தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. 

2. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி இல்லாத நிலையில், இச்சமய விழாக்களைப் பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

3. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை, கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்படுகிறது.

4. மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது. 

5. தனிநபர்கள், தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களில் வெளிப்புறத்திலோ / சுற்றுப்புறத்திலோ வைத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறிநிலையத்துறையால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

6. தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியினைக் கடைப்பிடித்தல் மற்றும் இதர கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

7. இவ்வனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை எவ்வகையிலேனும் மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

8. இந்த விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தவறாது முகக்கவசம் அணிவதோடு அவ்விடங்களில் பொருட்கள் வாங்க நிற்கும்போது சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

9. சென்னை, வேளாங்ண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்தவ சமயத்தாரால் கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின்போது, பொது இடங்களில் மக்கள் விதிக்கப்படுகிறது. கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் மேற்க்கண்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி காஞ்சிபுரம் மாவட்டத்தை கொரோனா நோய்த்தொற்று இல்லா மாவட்டமாக மாற்ற போதிய ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கையில்  தெரிவித்துள்ளார். 

✒ செய்தியாளர் E. ஜாபர்

No comments

Thank you for your comments