Breaking News

புல்லூர் கிராமத்தில் விசிக கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார்

கடலூர்:

கடலூர் மாவட்டம்,வேப்பூர் அருகிலுள்ள,  மங்களூர் ஒன்றியம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 16 ந் தேதி, வியாழக்கிழமை அன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரான தொல், திருமாவளவன், தமது தொகுதியில் பல்வேறு பகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டார்.


அப்போது புல்லூர் முகாம் சார்பில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட திருமாவளவன் எம்பி, அங்கு விடுதலை  சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் விசிக நிர்வாகி செல்லப்பன் விசாலாட்சி தம்பதியர்களின் மகள் நிஷா மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி மற்றும்  மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகளும்,  புல்லூர் கிராம முகாம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments