ஹோட்டல்களில் அதிரடி சோதனை... அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 80 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காஞ்சிபுரம் நகரில் பிரதான சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அசைவ ஓட்டல்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 20 ஓட்டல்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் செயற்கை நிறமிகள் அதிகம் சேர்க்கப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட சுமார் 80 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. . இது தொடர்பாக சில ஓட்டல்களுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.



No comments
Thank you for your comments