உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்திய வாட்ஸ் அப் வைரல்
தென்காசி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊர் புதுப்பட்டி. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் இளைஞர் சார்பில் அறிவு போன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் கவனத்திற்கு, தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி மன்ற நிதியில் இருந்து எடுத்து விடலாம் என்று எண்ண வேண்டாம்.
இளைஞர்களாகிய நாங்கள் கிராமசபை கூட்டங்களில் வரவு செலவு கணக்குகளை கேட்போம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உள்ளாட்சி தேர்தல் போட்டியிடுபவர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments
Thank you for your comments