Breaking News

அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்

ஒன்றிய மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைப்பெற்றது.

ஒன்றிய மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த  வலியுறுத்தி  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அம்பேத்கர் சிலை முன்பு அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அம்பேத்கர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.


பின்பு அங்கிருந்து 200 க்கும் மேற்ப்பட்டோர்  ஊர்வலமாக சென்று  விருத்தாசலம்  ஜங்ஷன் ரோட்டில் உள்ள  போஸ்ட் ஆபீஸ் முன்பு தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த  ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

No comments

Thank you for your comments