Breaking News

அருந்ததி இன மக்கள் இடுகாடு இடம் ஆக்கிரமிப்பு... மீட்டுத் தரக் கோரி சார் ஆட்சியரிடம் மனு

திட்டக்குடி

திட்டக்குடி மதுரவல்லி கிராமத்தில் அருந்ததி இன மக்கள் இடுகாடு இடத்தை ஆக்கிரமிப்பு  செய்துள்ளனர். ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தரக் கோரி சார் ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மதுரவல்லி கிராமத்தில் அருந்ததியின மக்கள் சுமார் 150 பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வயது அடிப்படையில் அல்லது எந்த விதத்திலாவது மனித இறப்பு ஏற்பட்டால் அடக்கம் செய்ய நிரந்தர இடுகாடு  இல்லை என விருத்தாசலம் சார் ஆட்சியரிடம்  விசிக. மாநில துணை செயலாளர் ராஜ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.

மேலும் மனித  சடலங்களை அடக்கம் செய்ய மறுப்பதோடு சமூக மக்களின் வாழ்வாதாரத்தை சீர் குறைப்பதோடு அச்சுறுத்தலும் கொலை மிரட்டல் இட்டு  செய்து வருகின்றனர்.

அதோடு மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் வகையிலும் காவல்துறை அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் சாதிய தூண்டுதல் செய்யப்பட்டு மன வேதனை ஏற்படுகிறது.

மேலும் மத்தியில் ஆளுகின்ற ஒன்றிய அரசின் திட்டமான ஒரே நாடு ஒரே தேசம் என்பது வேதனைகளை ஏற்படுத்துகிறது மேலும் தீண்டாமைக் கொடுமைகளை எங்களுக்கு ஏற்படுத்தும் சாதிவெறியர்களை கண்டிக்க வேண்டும் என்று விருதாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வழக்கறிஞர் மதுசூதனன், விசிக நகர பொறுப்பாளர் வீரமணி, வெங்கடேசன் மாவீரன் ராமசாமி, மகேந்திரன், அண்ணாதுரை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட அருந்ததியின மக்கள் கை குழந்தைகளோடு  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்...

No comments

Thank you for your comments