அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார் - முதலமைச்சர் ஸ்டாலின், சசிகலா நேரில் அஞ்சலி
சென்னை
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் இன்று (1-9-2021) காலை சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், சசிகலா, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி,ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருங்குடி மருத்துவனைக்கு சென்று நேரில் ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்திய பின், மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
இபிஎஸ் நேரில் அஞ்சலி
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
சசிகலா நேரில் ஆறுதல்
ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமான நிலையில் வி.கே. சசிகலா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் கண்கலங்கிய நிலையில் காணப்பட்டார்.
தேனியில் நல்லடக்கம்
விஜயலட்சுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விஜயலட்சுமியின் உடல் இறுதி காரியங்களுக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது
அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; அண்ணன் ஓபிஎஸ் மீளாத் துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து துயரில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருமதி.விஜயலட்சுமி அவர்களின் மறைவு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பேரிழப்பு.
— M.K.Stalin (@mkstalin) September 1, 2021
இல்லத் துணையை இழந்து வாடும் அண்ணன் @OfficeOfOPS அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/meq8p3s6Wu
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து துயரில் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 1, 2021
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் @AIADMKOfficial ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் @OfficeOfOPS அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினேன்.
— K.Annamalai (@annamalai_k) September 1, 2021
அவர்களின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
1/2 pic.twitter.com/J6BaWoxtVU
தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான @AIADMKOfficial ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் @OfficeOfOPS அவர்களின் துணைவியார் மற்றும் மக்களவை உறுப்பினர் @OPRavindhranath அவர்களின் தாயார் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. pic.twitter.com/Ipj77SUbOK
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 1, 2021
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.#AIADMK pic.twitter.com/JwyV4S3neo
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 1, 2021
திராவிடர் கழக தலைவர் @AsiriyarKV அவர்கள் மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.#AIADMK pic.twitter.com/sh5DNVpTU1
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 1, 2021
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS அவர்களின் வாழ்க்கைத்துணைவியார் திருமதி. விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானது விவரிக்க இயலாத துயரம்!
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 1, 2021
- மாண்புமிகு கழக இணை ஒருங்கிணைப்பாளர் @EPSTamilNadu அவர்கள்#AIADMK #அதிமுக pic.twitter.com/DqrHRLkNgr





No comments
Thank you for your comments