அனுமதி இல்லாத கட்டிடங்களுக்கு சீல்...! - மாநகராட்சிஅதிரடி...
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி நகர் மெயின் ரோட்டில் சர்வே நம்பர் 482 அடங்கிய கட்டிடங்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்ததை தொடர்ந்து பல புகார்கள் வந்தது.
இதனையடுத்து ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உத்தரவின் பெயரில் நகரமைப்பு ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் அனுமதி வழங்கவில்லை என்று தெரிந்தவுடன் இந்த கட்டிடத்திற்கு நகராட்சி விதியின்படி நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் அவர்கள் முன்னிலை சீல் வைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அனுமதி வாங்காத கட்டிடங்களை உடனடியாக அனுமதி வழங்குமாறு அறிவுறுத்துகின்றனர்.


No comments
Thank you for your comments