6 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க ஆணை
காஞ்சிபுரம்:
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 6 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை ..
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க காஞ்சி தாலுக்கா, பாலுசெட்டிசத்திரம், உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1 ) பிரவின் (21) த/பெ.கலைமணி, திருவள்ளுவர் சாலை, திருக்காலிமேடு,
2 ) கமல் ( 28 ) த/பெ.தங்கமணி, TMS நகர், ஏனாத்தூர் கிராமம்,
3 ) சரவணன் ( 30 ) த/பெ.ஜெகன்நாதன், பெங்களூர் மெயின்ரோடு, இராஜகுளம்,
4 ) சத்தியா ( 46 ) த/பெ.தயாளன், ஜெ.ஜெ.நகர், சிறுகாவேரிப்பாக்கம், காஞ்சிபுரம்,
ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச - ன்படி காஞ்சி தாலுக்கா, பாலுசெட்டிசத்திரம், உத்திரமேரூர் காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படியும்,
மணிமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடியான ஜெயசூரியா ( 20 ) த/பெ.செல்வம், பெருமாள் கோயில் தெரு, குழாங்கல்சேரி, குன்றத்தூர் தாலுக்கா ஆகியோர் மீது பிரிவு 107 கு.வி.மு.ச - ன்படி மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அவர்களின் வேண்டுகோளின்படியும் வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

No comments
Thank you for your comments