Breaking News

ஆப்கானிஸ்தான் குறித்து இந்தியா, ஆஸ்திரேலியா கவலை



புதுடில்லி,செப்.12-

ஆப்கானிஸ்தானத்தின் இன்றைய நிலை குறித்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கூட்டறிக்கை ஒன்றில் கவலை தெரிவித்தன.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரை வரவேற்றனர்.

இந்திய - ஆஸ்திரேலியா டூ ப்ளஸ் 2 அமைப்பின் சார்பில் பேச்சுவார்த்தையில் சனிக்கிழமையன்று துவங்கின. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

The Union Minister for Defence, Shri Rajnath Singh and the Union Minister for External Affairs, Dr. Subrahmanyam Jaishankar with the Minister for Defence of Australia, Mr. Peter Dutton and the Minister for Foreign Affairs and Women, Australia, Ms. Marise Payne at the Joint Press Statements after the ‘2+2’ Ministerial level meeting between India and Australia, in New Delhi 

 இந்த கூட்டறிக்கையில் ஆப்கானிஸ்தானத்தின் இன்றைய நிலவரம் குறித்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கவலை தெரிவித்தன.

தொடர்ந்து நடந்த போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தான் அரசின் நடவடிக்கைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். இதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆப்கானிஸ்தான் அரசின் கையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் அனைவரும் அரசியல் வாழ்க்கையில் முழு அளவில் பங்குகொள்ள அரசில் இடம் அளிக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானத்தில் பெண் குழந்தைகள் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு அமைதியின் திரு நிலையம் நிலவுவதற்கு ஆட்சியில் பெண்களுக்கும் உரிய பங்கு வழங்க வேண்டும். பெண்களின் பங்களிப்பு இல்லாத அரசியல் காரணமாக ஆப்கானிஸ்தானத்தில் அமைதியை நிலை பெறச் செய்ய முடியாது. 

ஆப்கானிஸ்தானத்தில் அரசியலில் பெண்களுக்கு பங்கு அளிக்காமல் அமைதியை நிலைநாட்டுவது சாத்தியமில்லாத நடவடிக்கையாகும் பெண்களுக்கு உரிய அரசியல் பங்கு வழங்கும் அரசாங்கம் மட்டுமே அனைவருக்குமான அரசாங்கமாக திகழ முடியும்.

ஆப்கானிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தான் மக்களின் அமைய வேண்டும் அதற்கு அடித்தளம் தேவை.

இத்தகைய நடவடிக்கைகள் இல்லாத ஆப்கானிஸ்தான் அரசு செய்வது பயன் இல்லாத செயலாக அமையும் என்று கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் கூட்டு அறிக்கையை வெளியிட்ட பின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்பொழுது, 

கடந்தகால அமைப்பாக மாறிவிட்டது எதிர்கால பாதையாக அமைப்பு நம்முன்னே உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பாதுகாப்பு தொடர்பான உறவுகளில் கணிசமான இயக்கத்தை இரண்டு நாடுகளும் பொது நலனில் அக்கறை கொண்டுள்ளன இந்தோ பசிபிக் கடல் பயணங்கள் சுதந்திரமான வகைகளாகவும் விதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நடவடிக்கைகளாகவும் வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

வெளியுறவு அமைச்சர் பெர்ன் பேசும்பொழுது இரண்டு நாடுகளின் கடற்படைகளும் கூட்டாக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

No comments

Thank you for your comments