ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்
ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதி மார்க்கெட்டில் போலீஸ் அதிகாரியை பயங்கரவாதி ஒருவன் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளூர் போலீசார் துணையுடன் வேட்டையாடி வருகின்றனர். இதனால் அவ்வப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
சில நேரங்களில் பயங்கரவாதிகள் பொதுவான இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். இன்று ஸ்ரீநகர் கன்யார் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த மார்க்கெட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இரண்டு முறை சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹமது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சி.சி.டி.வி. பதிவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு பின்னால் மிக அருகில் இருந்து பயங்கரவாதி தாக்கியது தெரியவந்துள்ளது. அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போலீசார் பயங்கரவாதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments