சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபாரதம்... மாநகராட்சி கடும் எச்சிரிக்கை...
வேலூர்:
சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தென்றல் நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் தெருக்களில் படுத்துக்கொண்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிபட்டனர். இதனையடுத்து, பொதுமக்கள் புகார் அளித்தனர்.
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் மாடுகளை பிடிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு மாட்டுக்கும் ரூபாய் 5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் படுத்துக் கொண்டிருக்கும் மாடுகளை தொடர்ந்து பிடிக்கப்படும் என அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் மாடுகளை சாலையில் சுற்றித்திரிய விட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?


No comments
Thank you for your comments