Breaking News

பாலாற்றில் ஆற்றில் அடித்து சென்ற சகோதரர்கள் சடலம் மீட்பு

வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடியில்  பாலாற்றில் ஆற்றில் குளிக்கும்போது அடித்து சென்ற சகோதர்கள் 30 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.




காட்பாடி அடுத்த விருதம்பட்டு டிகே.புரம் பகுதியை சேர்ந்த முபாரக், ஜாகீர் ஆகிய சகோதரர்கள் நேற்று முன்தினம் காலை பாலாற்றில் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது மாயமாகினர்.


 

அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காட்பாடி தீயணைப்பு துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது 30 மணி நேரத்திற்கு பிறகு அண்ணன் முபாரக் உடல்  100 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தம்பி ஜாகீர் உடல் மீட்கப்பட்டுள்ளது. 



இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

கடந்த இரண்டு நாட்களாக காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்தில் இருந்தது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டார். 



No comments

Thank you for your comments