கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்! வெளியான திடுக்கிடும் தகவல்
கிருஷ்ணகிரி
காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணி எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (28). இவர் அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி கோரிமா (27). இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கோரிமா 2 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களாக கோரிமாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பக்கத்தில் உள்ள முருகேசன் என்பவரின் அக்குபஞ்சர் மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்ற கோரிமாவுக்கு திடீரென உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது செல்லும் வழியிலே கோரிமா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சந்தேகமடைந்த ரியாஸ் முருகேசன் நடத்தும் மருத்துவமனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலிசார் முருகேசனின் மெடிக்கல் சென்டரை ஆய்வு செய்த போது அக்குபஞ்சர் முறை மருத்துவம் என்று கூறி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
அது மட்டும் இல்லாமல் கர்ப்பிணியான கோரிமாக்கு முருகேசனின் தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்தார் என உடல்கூறாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்த மருந்து பொருட்கள் மற்றும் ஊசி மாத்திரைகளை போன்றவற்றை சுகாதார துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலியான முறையில் மருத்துவம் செய்த குற்றத்திற்காக தலைமறைவாக உள்ள முருகேசனை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments