மாணவர் தனுஷ் மரணத்திற்கு திமுக அரசே முழுப்பொறுப்பு -பாஜக தலைவர் ஆவேசம்
சென்னை:
மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தவேண்டும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தனுஷ் (20) தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வின் அச்சம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கிறார். மாணவர் தனுஷ் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேசமயம், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியவண்ணம் உள்ளனர்.
மாணவன் தனுஷின் தற்கொலை செய்த சம்பவம் வேதனை அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை திமுக நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு, சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு’ என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
ஆண்டுக்காண்டு தமிழக
— K.Annamalai (@annamalai_k) September 12, 2021
ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் NEET தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை@arivalayam நிறுத்தட்டும்.
அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு.
No comments
Thank you for your comments