Breaking News

வேலூர் மாவட்டத்தில் 978 சிறப்பு முகாம்களின் 93% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

வேலூர்:

தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமின் வாயிலாக இன்று (12.09.2021) வேலூர் மாவட்டத்தில் 978 சிறப்பு முகாம்களின் வாயிலாக அனைத்து பகுதி மக்கள் பயன் அடையும் நோக்கத்தில் அவர் அவர் வசிக்கும் பகுதிகளில் இம்முகாம்களில் செயல்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதின் தொடர்ச்சியாக இன்று காலை வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், குடியாத்தம், அணைக்கட்டு, காட்பாடி, பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்  அவர்கள் நேரடியாக முகாம்களை ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பொதுமக்களுக்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க அப்பகுதியில் அதிகபடியான இருக்கைகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 978 சிறப்பு முகாம்களின் வாயிலாக இன்று மாலை 4 மணி வரை அரசு வழங்கியுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 93 சதவீதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், இப்பணியினை மேற்கொண்ட துறை சார்ந்த அதிகாரிகள், சக ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அந்தந்த பகுதி சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.  

No comments

Thank you for your comments