கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் ...!
குமரி:
தமிழகம், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த 15 பேர் படகு மூலம் ரகசியமாக வந்துள்ளதாகவும், அவர்கள் தமிழகத்தில் இருந்து கேரளா சென்று, பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில போலீஸாருக்கு உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கேரளாவை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தீவிரசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டகடலோரப் பகுதிகளில் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 மாநில மீனவர்களுக்கும் இதுகுறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டு, சந்தேகப்படும் வகையில் நடமாடும் படகுகள், நபர்கள் குறித்து தகவல் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால், தமிழகத்தின் கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளில் இருந்து கேரள கடல் பகுதிகளான முனம்பம், அழிக்கோடு பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நபர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அப்பகுதிகளில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments