Breaking News

கொரோனா விதியை மீறி விநாயகர் சிலை விற்பனை செய்தால் தண்டனை... வட்டாட்சியர் எச்சரிக்கை விடுப்பு

கடலூர்:

கொரோனா விதியை மீறி விருத்தாசலத்தில் விநாயகர் சிலை விற்பனை செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து விழா கொண்டாடுவது நீண்ட நாள் மக்களுடைய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது

தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை செய்யும் பனியில் வியாபாரிகள் ஈடுபட்டு வந்தனர்.


இதுபற்றி தகவலறிந்த விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார், விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன், உள்ளிட்டோர் சிலை செய்யும் இடத்தை ஆய்வு செய்து தடையை மீறி விநாயகர் சிலை  செய்யக்கூடாது மேலும் செய்த சிலையினை விற்பனையும் செய்யக்கூடாது கொரோனா விதியை மீறி விற்பனை செய்தால் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தனர்

No comments

Thank you for your comments