இந்தியாவில் நாசம் விளைவிப்பதற்கென்றே 12 பயங்கரவாத குழுக்கள்... அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அறிக்கை தகவல்
வாஷிங்டன் :
பாகிஸ்தானில் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் என்று பெயர் சூட்டப்பட்டு 12 பயங்கரவாத குழுக்கள் இயங்குகின்றன இவற்றை அறிந்து கொள்ளுதல் இந்தியாவில் நாசம் விளைவிப்பதற்கென்றே இயங்குகின்றன என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது.
அறிக்கையின் சாராம்சம் வருமாறு:
பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத குழுக்களை மொத்தம் 5 வகையாக பிரிக்கலாம்.
1. உலக அளவில் இயங்கும் குழுக்கள்.
2. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் குழுக்கள்,
3. இந்தியா மற்றும் காஷ்மீரை மையமாக கொண்டு இயங்கும் குழுக்கள்,
4. பாகிஸ்தான் உள்நாட்டில் இயங்கும் குழுக்கள்,
5. மதவாத பயங்கரவாத குழுக்கள்.
இந்த 5 வகைகளிலும் 12 பயங்கரவாத குழுக்கள் உள்ளன இவற்றில் ஐந்து குழுக்கள் இந்தியா மற்றும் காஷ்மீரை மையமாகக்கொண்டு இயங்குபவை.
இவற்றில் முக்கியமானவை லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது. பாகிஸ்தானில் தவிர ஆயுதம் ஏந்திய தீவிரவாதக் குழுக்கள் நூற்றுக்கும் மேல் இயங்குகின்றன.
அவை பாகிஸ்தானில் 1980ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றன. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பும் 1980 ஆண்டு துவக்கப்பட்டது தான் 2001ஆம் ஆண்டில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்ற பெயர் கிடைத்தது. இந்த அமைப்பு இந்தியாவின் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்த அமைப்புதான் பொறுப்பாகும். பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாகவும் தரை வழியாகவும் புறப்படும் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் இராணுவம் இருந்தபொழுது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு 1980ல் துவக்கப்பட்டது.
அந்த அமைப்பு இப்பொழுது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்குகிறது. இப்பொழுது காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக அந்த அமைப்பு போராடுகிறது.
இந்த அமைப்பின் இயக்கம் இந்தியாவில் உணரப்பட்ட போதிலும் அதன் மையங்கள் பாகிஸ்தான் நகரங்களில் தான் உள்ளன.
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சி ஒன்றின் அமைப்பாக ஹிஜ் உல் முஜாஹிதீன் என்ற அமைப்பு 1989ல் துவக்கப்பட்டது.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக அது இயங்கி வருகிறது.
ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இயங்கும் மற்றொரு முக்கியமான பயங்கரவாத அமைப்பு அல்கொய்தா அது கராச்சி நகரிலும் பழங்குடியினர் வாழும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பகுதிகளிலும் இயங்குகிறது.
இந்த அமைப்பு இந்தியாவில் இயங்கும் பல தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்கி வருகிறது.
இந்தியாவையும் ஆப்கானிஸ்தான் அத்தையின் குறிவைத்து இயங்கிவருகின்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறிய போதிலும் தீர்மானகரமான நடவடிக்கைகளை இனிமேல்தான் பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் ராணுவமும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருபோதும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது இல்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.


No comments
Thank you for your comments