Breaking News

நகராட்சி ஆட்டுத் தொட்டிக்கு மர்மநபர் தீவைப்பு

விருத்தாசலம்

விருத்தாசலம் நகராட்சி ஆட்டுத் தொட்டிக்கு  மர்மநபர்  தீவைப்பு சுமார் 20 அடி தூரத்தில் இருந்த காய்கறி மார்க்கெட் அதிர்ஷ்டவசமாக  தப்பியது.. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது அதன் அருகில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆட்டுதொட்டி மற்றும் மீன் மார்க்கெட்  இயங்கி வருகிறது.

இங்கு ஆடுகளை கட்டி வைப்பதற்காக தென்னம் கீற்றில்  கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மறுநாள் விற்பனை செய்யும் ஆடுகளை பாதுகாப்பாக கட்டி வைத்திருப்பது வழக்கமாக  இருந்தது. 

வியாபார நேரம் முடிந்த பிறகு  ஆட்டு தொட்டி கொட்டகைக்கு மர்மநபர் யாரோ  தீ வைத்ததால்  மளமளவென எரிந்து முற்றிலும் சேதமானது.

👉 இலவச மின் இணைப்பு அறிவிப்பு👆

இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு  வந்தனர். 

சுமார் 20 அடி தூரத்தில் காய்கறி மார்க்கெட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொட்டகைக்கு தீ வைத்த மர்ம நபர் யாரென்று விருத்தாசலம் போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பெரும்  பரபரப்பாக காணப்பட்டது.

No comments

Thank you for your comments