Breaking News

பல்வேறு கட்சியினர் சமுக நீதி உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம்:

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமுக நீதி உறுதிமொழி ஏற்றனர்.

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவித்தும் பெரியார் பிறந்தநாளையொட்டி,   காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுக  உள்ளிட  பல்வேறு கட்சியினர்  மலர் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினர். 


திமுக சார்பில் எம்.பி.ஜி செல்வம், எம்.எல்.ஏ சுந்தர், எழிலரசன் மற்றும் திமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதனை தொடர்ந்து உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர் 

இதன் தொடர்ச்சியாக விசிக,மக்கள் மன்றம்  உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மலர் மாலை அணிவித்து உறுதிமொழியையும் ஏற்றுகொண்டனர்.




No comments

Thank you for your comments