அம்பேத்கர் தெரு பெயர்ப்பலகை அழிப்பு.. சார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
விருத்தாசலம்
விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள அம்பேத்கர் தெரு பெயர்ப்பலகை அழித்ததால் சார் அலுவலகம் முன்பு இந்திய குடியரசுக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள பெரியார் நகர், எம்ஜிஆர் நகர், திருமலை திருச்சானூர் திருமண மண்டபம் வழியாக பூதம்பூர் பேருந்து நிறுத்தம் வரை இணைக்கும் பரங்கிப்பேட்டை சாலைக்கு விருத்தாசலம் நகராட்சி பதிவேட்டின் படி டாக்டர் அம்பேத்கர் சாலை என்று உள்ளது
அதன்படி நகராட்சியின் மூலம் இரண்டு சாலைகளில் உள்ள முகப்பில் பெயர் பலகை வைத்து டாக்டர் அம்பேத்கர் தெரு என்று எழுதப்பட்டு உள்ளது.
ஆனால் பரங்கிப்பேட்டை சாலை இணைப்பில் உள்ள பெயர் பலகையில் 25.9.2021 தேதி சமூக விரோதிகள் மஞ்சள் கலர் அடித்து கருப்பு கலர் பெயிண்டால் நகராட்சி பதிவேட்டில் இல்லாத பெயரை எழுதி உள்ளனர்.
இந்த செயல் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தும் செயலாக உள்ளது என்று இதனை கண்டித்து இந்திய குடியரசு கட்சி மற்றும் அம்பேத்கர் சமூக கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு சங்கம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் மங்கா பிள்ளை தலைமையில் விருதாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.
இதில் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் ரஜினி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments