Breaking News

மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் இன்று விருத்தாசலம் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்வதாக விருத்தாசலம் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

👉 இலவச மின் இணைப்பு அறிவிப்பு👆

அதன்படி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித் குமார் மாட்டுவண்டி தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தனார். 

Click here 👉 வரி பங்கீடு விவாதமும் -  நிதிஅமைச்சர் கூறியது   சரியான பதிலா?

இந்த பேச்சுவார்த்தையில்,  15 நாட்களுக்குள் மாட்டுவண்டி மணல் குவாரி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்

No comments

Thank you for your comments