ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்களுக்கு மட்டும் 100- நாள் வேலை... கொந்தளித்த கிராம மக்கள்... இனியாவது நிர்வாகம் செவி சாய்க்குமா...
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குப்பநத்தம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த நான்கு வருடங்களாக எந்த ஒரு வேலையும் வழங்கப்படாத நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை தருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம்...
இந்நிலையில் கொந்தளித்த பொதுமக்கள், பணித்தள பொறுப்பாளர் பணியிடம் நீக்கவேண்டும் என்றும் பொது மக்களுக்கு 100 நாள் வேலை தர மறுப்பதாகவும், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது...
இனியாவது, அப்பகுதி மக்களுக்கு சமநிலையில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்...
வழக்கம் போல் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்களுக்கு மட்டும்தான் 100- நாள் வேலை கிடைக்குமா...? இல்லை அனைத்து கிராம மக்களுக்கு வேலை கிடைக்குமா...? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Click here 👉 வரி பங்கீடு விவாதமும் - நிதிஅமைச்சர் கூறியது சரியான பதிலா?

No comments
Thank you for your comments