ஆணவக் கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு- ஒருவருக்கு தூக்குத் தண்டனை... 12 பேருக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு, வன்னியர் பெண் கண்ணகியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணகியையும் அவர் கணவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனையும் துடிக்க துடிக்க ஆணவ படுகொலை செய்த கொலையாளிகள் மற்றும் துணைநின்ற காவலர்களுக்கு இன்று தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு..
A2 கண்ணகியை படுகொலை செய்த அவரின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
A1-A15 ( குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை (இதில் A4 & A9 விடுதலை செய்யப்பட்டனர்)
ஆயுள் தண்டனைப் பெற்ற A14 தமிழ்மாறன் அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தவன், தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அடுத்து, A15 செல்லமுத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்து குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவர். தற்போது காவல் ஆய்வாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் படுகொலை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.
எனவே குற்றவாளிகளில் 13 பேரும் தண்டனைப் பெற்றுள்ளனர். ஒருவன் உயிர் துறக்கிறான்... மற்றவர்கள் வாழ்க்கையைத் துறக்கிறார்கள்....
A4 & A9 முருகேசனின் சித்தப்பா ஐயாசாமி மற்றும் குணசேகரன் ஆகியோர் மீது பொய்யாக வழக்கு சோடிக்கப்பட்டதால் விடுதலை.
துணிச்சலோடு தீர்ப்பினை வழங்கிய சிறப்பு நீதிபதி உத்தமராசா ஏற்கெனவே சங்கராச்சாரியாரை சிறைக்கு அனுப்பியவர்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது.....
விருதாச்சலம் புதுக்கூரைப்பேட் கிராம பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை கண்காணிப்பாளர் பார்வையிட்டு வருகிறார். அப்பகுதி மக்களிடையே எந்த ஒரு வன்முறையும் இயலா வண்ணமாக காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர் .



No comments
Thank you for your comments