குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏழுமலை ( 26 ), த/பெ.மகேந்திரன், எண் .13 / 40, சித்தி விநாயகர் பூந்தோட்டம் தெரு, காஞ்சிபுரம் என்பவர் அடிதடி மற்றும் வழிபறி வழக்கில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் வழிபறி வழக்கில் சம்மந்தப்பட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் 31.08.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. ஆர்த்தி அவர்கள் எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில ( GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments
Thank you for your comments