Breaking News

என் எதிரில் யாரும் அமரக்கூடாது... கோட்டாட்சியர் அலுவலக கோர கூத்து...!

வேலூர், செப்.1-

என் எதிரில் யாரும் அமர கூடாது என்று வேலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் திவ்ய பிரமாணம் எழுதப்படாத சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். 

கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள், இவரது நடவடிக்கையாலும் அநாகரிக பேச்சாலும்  சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 

வேலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் திவ்ய பிரமாணம்.   இவர் இதற்கு முன்னர் வேலூர் வடக்கு பகுதி வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஆவார். 

இவர் மீது தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல் விஷயமாக சென்று வரும் பொதுமக்கள் தரப்பில் ஒரே ஒரு குற்றச்சாட்டை திரும்பத் திரும்ப கூறுகின்றனர்.  அது என்னவென்றால் அவரது எழுதப்படாத சட்டத்தை நடைமுறைப்படுத்த பார்க்கிறார் என்பது தான் அது. 

அதாவது கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் இந்த இளநிலை உதவியாளரை கட்டாயம் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.  இவரை சந்தித்து தங்கள் கருத்துக்களை கூற வேண்டியுள்ளது. 

அப்படி செல்பவர்கள், இவருக்கு முன் அமர்ந்து பேசக்கூடாதாம்... அவருக்கு அறவே பிடிக்காதாம்... அப்படி யாராவது தெரிந்தோ தெரியாமலோ, அங்கு இருக்கும் இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து விட்டால் போதும் அந்த நபரை அருவெறுக்கத்தக்க வகையில் கடும் சொற்களைக் கூறி திட்டி, எழுந்து நின்று கொண்டு பேசிவிட்டுப் போக செய்கிறார் இந்தப் பெண் சர்வாதிகாரி .

இங்கு என்ன ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா...? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இவர் என்ன அப்படி அவ்வளவு பெரிய அதிகாரியா... என்ற எண்ணம் கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

இதுபோன்ற போக்கு கொண்ட அலுவலர் தனது அலுவலகத்தில் பணி புரிகிறார் என்ற தகவல் கோட்டாட்சியருக்கு தெரியுமா...? தெரியாதா..? என்று தெரியவில்லை. இதே தகவல் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு தெரியுமா என்பது யாருக்கும் தெரியாது. 

பலர் மனதை புண்ணாக்கும் விதமாக நடந்து கொள்ளும் விதம் அவர் எதிரில் நின்று கொண்டு கைகட்டி பேச வேண்டும் என்பதும் நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது சந்தேகமே... !

மக்கள் பணியாற்றும் பணியில் இருந்துக்கொண்டு மக்களை அதிகாரம் செய்யும் உரிமையையும் அதிகாரத்தையும் இவருக்கு வழங்கியது யார்...?

பொதுமக்களுக்கு வேலை செய்யும் வேலையாள்தான் (Government servant) அரசு அலுவலர்கள் என்பதை அறியாதவரா...?

இது மக்கள் ஆட்சிதான்.... அவரது ஆட்சி அல்ல என்பதை உணர்வாரா....?

இல்லையென்றால்.... மக்களே அதை கட்டாயம் உணர்த்துவார்கள்...!

தமிழக முதலமைச்சரே, "இது உங்கள் ஆட்சி (மக்கள்)  உங்களுக்கானது"  என்று கூறிதான்  மக்கள் நலனை கொண்டே ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதுபோன்றவர்களால் அரசுக்குதான் அவப்பெயர்....

ஆனால் இவரோ... சந்திக்கும் பொதுமக்களிடம் தர்பார் ஆட்சி நடத்தி வருகிறார்... 

இவரது நடவடிக்கை இதே போன்று  தொடர்ந்தால்,  முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார்கள் செல்லும் என்பதை இவர் நினைவில் வைத்துக்கொள்வாரா...?

கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் மனம் உடைந்து மனரீதியாக பாதிக்கப்பட்டு செல்கின்றனர்....   இதனால் விபரீத நிகழ்வை கையாளும் நிலைக்கும் பொதுமக்கள் தள்ளப்படலாம்  என்பதை இவர் உணர்வாரா...? 

அவரது பெயருக்கும்... அவரது செயலுக்கும் ... தொடர்பற்று செயல்படுகிறார் என்று... அவரது அநாகரிக பேச்சால் பொதுமக்கள் குமுறுகின்றனர்...


மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி அந்த அலுவலர் கொட்டத்தை அடக்க துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதுதான்  இந்த அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இதுபோன்ற சண்டி குதிரையை அடக்க சாட்டையை சுழற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

No comments

Thank you for your comments