BJP மற்றும் இந்து முன்னணியினர் 7 பேர் கைது - நீதிமன்ற காவல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுர மாவட்டத்தில் தேங்காய் கடைகாரரிடம் தகராறு செய்து கடையை சேதப்படுத்திய BJP மற்றும் இந்து முன்னணியினர் 7 பேர் கைது - நீதிமன்ற காவல் வைக்கப்பட்டுள்ளார்கள்..
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோயில் தெருவில் விநாயகர் கோயில் அருகே தேங்காய், பூ மற்றும் பழக்கடையை நடத்திவரும் பூபதி என்பவர் அத்திவரதர் புகைப்படத்தை அவமதித்ததாக கூறி அவரிடம் BJP மற்றும் இந்து முன்னனியைச் சேர்ந்தவர்கள் தகராறு செய்து கடையை சேதம் செய்தது சம்மந்தமாக சிவகாஞ்சி காவல் நிலைய குற்ற எண்.1709/21, 03.09.2021 தேதி அன்று வழக்கு பதிவு செய்தது சம்மந்தமாக
1) ஜெகதீசன்,
2) அதிசயம்குமார்,
3) ஜீவானந்தம்,
4) சந்தோஷ்,
5) தேவதாஸ்,
6)சதீஷ் மற்றும்
7) கூரம் விஸ்வநாதன, ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு 16.09.21 ந் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவு.
பூபதி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்
✒ செய்தியாளர் E. ஜாபர்

No comments
Thank you for your comments