நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு 284 நாட்கள் சிறை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதினார்.
இதனடிப்படையில், பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகளான
1) துளசிராமன் ( 24 ) த/பெ சம்பத், சன்னதி தெரு, தாமல் கிராமம்
2) மணிமாறன் ( 28 ) த /பெ.குணசேகரன், ரோட்டுத் தெரு, தாமல் கிராமம்
ஆகிய இருவரும் 110 குவிமுச - வின் படி நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 18.06.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி, துளசிராமன் மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் 16.07.21 அன்று அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாமல் கலங்கள் அருகே, முட்டவாக்கத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவரை வழிமடக்கி கத்தியை காட்டி அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சி செய்தது சம்மந்தமாக பாலுசெட்டிசத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
எனவே, இவர்கள் நன்னடததை பிணையை மீறிய குற்றத்திற்காக 284 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.


No comments
Thank you for your comments